Share it if you like it
- இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் கோர தாண்டவமாடியுள்ளது. அதில் 31,506 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாகவும் மற்றும் 2,503 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.உள்ளன. எனவே அதிலிருந்து மக்களை காப்பாற்ற கடந்த ஞாயிறன்று கொரோனா வைரஸ் தொற்றுநோயை “தன் கையால்” நிறுத்துமாறு கடவுளிடம் கேட்டுக் கொண்டதாகவும், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் வாடிகன் தேவாலயத்தின் போப்பாளரான பிரான்சிஸ் போப் லா ரிபப்ளிகா தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.
- மேலும் இத்தாலியில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் வெளியே சென்று நோயுற்றவர்களைச் சந்தித்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவியிருப்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசாங்கமே வலியுறுத்திக்கொண்டிருக்க வாடிகன் சர்ச் பிஷப் பிரான்சிஸ் போப் கூறியுள்ளது, பாதிரியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது .
Share it if you like it