மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்களின் காணொலி மற்றும் அறிக்கைகள்!

மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்களின் காணொலி மற்றும் அறிக்கைகள்!

Share it if you like it

 

கொரோனா வைரஸ் தொற்று மக்களிடம் மேலும் பரவாமல் இருக்க  மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ்  தொற்றினை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பிரபல மருத்துவர்கள் என தங்கள் இல்லங்களில் இருந்து மக்களுக்கு காணொலி மூலம் செய் முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிகெட்டின் கடவுள் என இந்தியர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின்  டெண்டுல்கர் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அரசிற்கு தனது பாராட்டுக்களையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தனது வேண்டுக்கோளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it