கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை, உலகம் முழுவதும் ஜந்தாயிரத்திற்கும் மேல் மக்கள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை எடுத்து வருவதாக, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானின் பிரபலமான பல்கலைக்கழகம், ஒன்று கொரோனா தொற்று நோய் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைத்து விட்டது.
This is probably the hilariously most absurd thing you would see today – University students in Pakistan chant "Coronavirus Zindabad" because the #coronaoutbreak has resulted in postponement of their exams giving them extra time for preparations. pic.twitter.com/vubI6it6Es
— Anas Mallick (@AnasMallick) March 13, 2020
இதனை அறிந்த அப்பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ‘கொரோனா வைரஸ் ஜிந்தாபாத்’ என்று கூச்சலிட்டு, தங்களது மகிழ்ச்சியை நண்பர்களிடையே பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை அனஸ் மல்லிக் என்னும் நபர் பகிர்ந்துள்ளார். ஒன்னு தீவிரவாதி அல்லது மனிதனை கொல்லும் கொரோனாவிற்கு வரவேற்பு சூப்பர் நாடு உங்களுடையது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.