கொரோனா நெருக்கடி காலக்கட்டத்திலும் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்லும் ஜாமியா மிலியா நிர்வாகம் – மாணவர்கள் அதிர்ச்சி !

கொரோனா நெருக்கடி காலக்கட்டத்திலும் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்லும் ஜாமியா மிலியா நிர்வாகம் – மாணவர்கள் அதிர்ச்சி !

Share it if you like it

  • கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெளி மாநிலத்தில் தங்கி படிக்கின்ற மாணவர்கள், தன் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாத பல மாணவர்கள், தங்கள் விடுதிகளில் தங்கியிருந்தனர். இந்நிலையில் ஒரு உத்தியோகபூர்வ குறிப்பில், ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் நிர்வாகமானது மாணவர்களை விடுதி வளாகத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
    நிர்வாகம் தனது உத்தியோகபூர்வ சுற்றறிக்கையில், பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள பகுதிகள் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.
  • அந்த பகுதியை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தும், மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களே அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டு அதன்பின் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்வது நியாயமாக தெரிகிறதா? அந்த பகுதியை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தும், மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் அவர்களே அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டு அதன்பின் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்வது நியாயமாக தெரிகிறதா மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறினால் கூட பேருந்து நிலையத்தில் அல்லது பிளாட்பாரத்தில் உறங்கி கொள்வார்கள். ஆனால் பெண் பிள்ளைகள் என்ன செய்வார்கள். அவர்களின் நிலைமையை ஜாமியா மிலியா நிர்வாகம் உணராதா ?
  • மத்திய அரசு மற்ற மாநில அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து இப்போது அத்தகைய மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதி செய்து வருவதால், ஜாமியா நிர்வாகம் அத்தகைய மாணவர்களை “விதிவிலக்குகள்” இல்லாமல் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. திடிரென்று மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேறு என்று சொல்வதால் என்ன செய்வதென்று அறியாமல் மாணவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

Share it if you like it