Share it if you like it
- கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தடை விதித்தது. எனினும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு இந்தியா வழங்கி வந்தது.
- இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ஆர்டர் செய்த அளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று டிரம்ப், மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியும் தீவிரமாகப் இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
- மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவிடம் கொரோனா மருத்துவ பொருட்களை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it