கொரோனா விவகாரத்தில் சொந்த நாட்டின் மீதே வெறுப்பை தூண்டும்  கம்யூனிஸ்ட் கட்சி !

கொரோனா விவகாரத்தில் சொந்த நாட்டின் மீதே வெறுப்பை தூண்டும் கம்யூனிஸ்ட் கட்சி !

Share it if you like it

  • சற்று முன் இடதுசாரி என அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியானது அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் கேரளமும், உலகத்தில் சீனாவும் கியூபாவும் தான் முன்னணி வகித்து வருகிறது.முதலாளித்துவ நாடுகள் எல்லாம் தோற்று போய் நிற்கின்றன என்று போட்டுள்ளனர்.

  • உலகிற்கே தற்போது பரவி வருகின்ற கொரோனா என்ற கொடிய வியாதி சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது. கொரோனாவால் அதிக உயிர் இழப்புகளும் சீனாவில் தான் ஏற்பட்டுள்ளன.
  • சீனாவில் 80,947 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,248 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை வெறும் 223 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் இறந்துள்ளனர். இதில் அந்த நான்கு பேரும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் ஆக கூறப்படுகிறது.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் மற்ற நாடுகளை விட மிக குறைந்த அளவு விகிதமே இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியானது இவ்வாறு கூறியிருப்பது அபத்தமானது. மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பல பிரபலங்கள் கூட இன்று பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கொரோனா தடுப்புக்காக பிரதமர் மோடிக்கு அண்டை நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
  • இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் அதன் மீதுள்ள அச்சம் குறையாத நிலையிலும்கூட கம்யூனிஸ்டு கட்சியானது மற்ற நாடுகளுக்கு வக்காளத்து வாங்கும் என்ற பெயரில் சொந்த நாட்டிற்கு எதிராக மக்கள் மனதில் வெறுப்பை தூண்டும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இது போன்ற சூழல்களில் அரசியல் செய்து மக்களை குழப்பும் செயலில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it