அந்திர மாநிலம் நெல்லூரில் பழைமையும், பெருமையும் வாய்ந்த பிரசித்தி பெற்ற பிரசன்னா வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. வரும் மார்ச் மாதம் நான்காம் தேதி பிரம்மோற்சவம் விழா நடைபெற இருந்த நிலையில், யாரோ சில மர்ம நபர்கள் சுவாமி ஊர்வலம், வரும் மிக பழமையான தேருக்கு தீ வைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். தீ அனணப்பு வீரர்கள் வருவதற்குள் தேர் முழுமையாக தேசம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து அக்கோவிலை சுற்றி பொதுமக்கள் கூடி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் குமார் ரெட்டி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பிரமோற்சவம் விழா நடக்கும் தினத்திற்குள் தேரை சரிசெய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரனண நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.