ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது, கடந்த 2011 ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக அதிக சொத்து, சேர்த்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.
இதன்மூலம் அவர் கணக்கில் காட்டப்படாமல் பல கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டிய சிபிஐ, 2012 மே மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில் மீண்டும் அவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகும்படி உத்தவிட்டிருந்தது. ஆனால் அவருக்கு நீதிமன்றம் பல முறை விலக்கு வழங்கப்பட்டதை, அடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர் எந்தப் பதவியில் இருந்தாலும், சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான்.
எனவே, ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. பல முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ,சுரங்க தொழில் அதிபர்களிடம் சாதகமாக மாநில அரசிடமிருந்து உதவி பெற்று தருவதாக ரூ. 1,172 கோடியை லஞ்சமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகனுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!
Share it if you like it
Share it if you like it