Share it if you like it
- நேற்று முன்தினம் சத்தீஸ்கரின் சுக்மாவில் திடீரென்று நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். நமது பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சண்டை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இந்த தாக்குதலில் 14 வீரர்கள் காயமடைந்தனர். பின்னர் 17 பாதுகாப்புப் படை வீரர்கள் காணவில்லை என கண்டறியப்பட்டது. ஒரு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 17 பாதுகாப்பு படைவீரர்களின் சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- காயமடைந்த வீரர்கள் ராய்ப்பூருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. நக்சல்களின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
Strongly condemn the Maoist attack in Sukma, Chhattisgarh. My tributes to the security personnel martyred in the attack. Their valour will never be forgotten. Condolences to the bereaved families. I pray for a quick recovery of those injured.
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
Share it if you like it