சாதித்து காட்டிய ஹிலால் அகமது ரதார்…! விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்த மோடி சர்க்கார்….!

சாதித்து காட்டிய ஹிலால் அகமது ரதார்…! விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்த மோடி சர்க்கார்….!

Share it if you like it

போதிய ஆயுதங்கள் வாங்கும் அளவிற்கு இந்தியாவிடம் பணம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே அந்தோணி பகீரங்கமாக நாட்டின் பலவீனத்தை உலக நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்தியது இந்தியர்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சீனா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் இந்தியாவை மறைமுகமாக கேலி பேசும் சூழ்நிலை உருவாகி இருந்தது காங்கிரஸ்.

மோடி பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஆயுதங்களை வல்லரசு நாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்வது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை  உற்பத்தி செய்வது என்று இந்தியா தற்பொழுது வேகமாக நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ரஃபேலில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது. மிகப்பெரிய தவறுகள் நடந்துள்ளது என்று மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது. ரஃபேல் விமானங்ள் தற்பொழுது இந்தியாவிற்கு வந்ததன் மூலம்  எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு.

பிரான்ஸில் இருந்து ரஃபேல் விமானத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் பொறுப்பாளராகவும், முதன் முதலில் ரஃபேலை ஓட்டிய இந்திய விமானியும்- காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரதாருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும், பொய் கூறிய எதிர்க்கட்சியினருக்கு கடும் கண்டனத்தையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it