இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே திமுக அரசியல் செய்து வருவதாக மக்களின் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது. இரு திராவிட கட்சிகளும் ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டே இன்று வரை அரசியல் களத்தில் நிற்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி! நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின். நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மகன் ஷியாம் கிருஷ்ணசாமி
ஸ்டாலின் கருத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பினை பின்வருமாறு டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் தற்கொலைகளை கண்டிக்காமல் அரசியலுக்காக அதை ‘Heroism’ போலவும் தியாகத்தை போலவும் சித்தரித்து தமிழகத்தை சுடுகாடாக மாற்றுகிறார்கள்…
சாவையும் நோவையும் காட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் திமுக. https://t.co/pUSW9kUax3 pic.twitter.com/ahzXFgWQSj
— Shyam Krishnasamy (@DrShyamKK) September 1, 2020