சீனாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்…! சர்வதேச நாடுகளிடம் திடீர் கோரிக்கை வைத்த மற்றொரு நாடு…!

சீனாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்…! சர்வதேச நாடுகளிடம் திடீர் கோரிக்கை வைத்த மற்றொரு நாடு…!

Share it if you like it

கொரோனா தொற்றை உலக நாடுகளிடம் இருந்து திசை திருப்பும் முயற்சியாக, 21 நாடுகளிடம் நிலம் மற்றும் கடல் வழி பகுதியில் தொடர்ந்து வன்முறை போக்கையே இன்று வரை மேற்கொண்டு வருகிறது சீனா என்பது கசப்பான உண்மை.

தற்பொழுது சீனா தனது கவனத்தை தஜிகிஸ்தான் நாட்டின் பக்கம் திருப்பியுள்ளது.  சீனாவிடம் வாங்கிய கடனை அந்நாடு திருப்பி செலுத்த முடியாத காரணத்தால்.  ஒரு பெரும் நிலப்பகுதியை தஜிகிஸ்தானிடம் இருந்து கடனுக்கு பதிலாக அண்மையில் எழுதி வாங்கி கொண்டது சீனா.

தற்பொழுது அந்நாட்டில் உள்ள 45% சதவீத நிலப்பரப்பு எங்களுடையது என்று சீனா, தஜிகிஸ்தான் நாட்டிற்கு அழுத்தம் கொடுத்திருப்பது. அந்நாடு மட்டுமில்லாது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை நாடு மற்றும் சிறு நாடுகளுக்கு சீனா பணத்தை வாரி இரைக்கும்.  அதே சமயத்தில் அந்நாட்டில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். நேரம் பார்த்து தனது கடனை திருப்பி செலுத்துமாறு கடுமையான அழுத்தத்தை கடன் கொடுத்த நாடுகளிடம் கேட்க துவங்கும்.

பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், அந்நாட்டின் துறைமுகம் அல்லது கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை தங்களுக்கு தருமாறு மிரட்ட துவங்கி விடும். பல ஆண்டுகள் கழித்து அதன் அருகில் உள்ள அனைத்து  நிலப்பகுதிகளும் தங்கள் நாட்டிற்கே சொந்தம் என்று சீனா தனது புத்தியை காட்ட துவங்கி விடும். உலகின் சாபக்கேடாக தற்பொழுது கம்யூனிஸம் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it