* சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
* இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
* சீனாவில் இருந்து செல்லும் பயணிகள் மூலம் பல வெளிநாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 5 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் 5 பேருக்கும் மருத்துவமனைகளில் தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.