Share it if you like it
- கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் பரவியது. பிறகு சீனாவின் அனைத்து நகரங்களிலும் இந்த வைரஸ் படையெடுத்து உள்ளது. இதனை பற்றி உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்க சீனா உண்மையான காரணத்தை கூறாமல் மழுப்பியுள்ளது. மேலும் இந்த வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதில்லை என்று கூறியுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது அந்த வைரஸ் மனிதனிடம் இருந்தும் மனிதனுக்கு பரவுகிறது.
- இந்த வைரஸினால் சீனாவில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை மற்ற நாட்டுக்கு தெரிவித்தால் தனது நாட்டின் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்று நினைத்து உண்மையை சொல்லாமல் பொய்யான கருத்தை தெரிவித்துள்ளனர் சீனாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்.
- இதனை சிறிதும் ஆராயாமல் அனைத்து நாட்டுக்கும் முன்னோடியாக திகழும் உலக சுகாதார அமைப்பு அந்த கருத்தை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதால் இந்த பதிவை கண்ட மற்ற நாட்டினர் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்று சற்று மெத்தனமாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது அந்த வைரஸ் கோர தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது. மேலும் சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் மறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it