20 எல்லைச்சாமிகளின் உயிர் இழப்பிற்கு காரணமான சீனாவிற்கு எதிராக. மத்திய, மாநில அரசுகள், பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. டிக் டாக் தடை மூலம் 6 பில்லியன் டாலர் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு தற்பொழுது பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு 1 லட்சம் கோடி ரூபாய் சீனாவிற்கு இழப்பு ஏற்படுத்த அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களை சீன அரசு தற்பொழுது தடை செய்துள்ளது. இதற்கு பதிலடியாக இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐ.என்.எஸ்) நாட்டில் சீன ஊடகங்கள், மற்றும் பத்திரிக்கைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Newspaper Society (INS) slams China's action of restricting access to Indian newspapers and media websites, urges Indian government to expeditiously take steps to ban access to Chinese media in the country.
— Press Trust of India (@PTI_News) July 2, 2020