சமீப காலமாக இளம் தலைமுறையினர் டிக் டாக் செயலிகள் மூலம் தங்களை பிரபலப்படுத்தி கொள்வதாக நினைத்து கொண்டு தங்களின் வாழ்க்கையே சீரழித்து கொண்டு வருகின்றனர். இந்த செயலி மூலம் பல்வேறு குடும்பங்களில் தற்பொழுது பெரும் பூகம்பங்கள் வெடித்துள்ளன. நாளுக்கு நாள் இந்திய கலாச்சாரம் அந்நிய மோகத்தால் சீரழிந்து வருகின்றது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சினிமா நட்சத்திரம், மாடல், மற்றும் சமூக ஊடகங்களில் மிகவும் புகழ் பெற்றவர் மிலிந்த் சோமன். தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாக டிக் டாக் செயலிலை தன் கைபேசியில் இருந்து நீக்கியுள்ளார். படிப்படியாக அந்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ், உடைகள், மற்றும் இயந்திரங்கள், போன்றவற்றை இந்தியர்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார். எல்லையில் சீனர்கள் நமக்கு கொடுக்கும் தொல்லைக்கு பதிலடியாக டிக் டாக் செயலியை நாம் நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Am no longer on tiktok. #BoycottChineseProducts pic.twitter.com/QEqCGza9j7
— Milind Usha Soman (@milindrunning) May 29, 2020