சீன மூல பொருட்கள் அல்லாமல்..! 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சர்வத்ரா கவசம்…!

சீன மூல பொருட்கள் அல்லாமல்..! 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சர்வத்ரா கவசம்…!

Share it if you like it

100% சீன மூலபொருட்கள் இல்லாமல் இந்திய ராணுவம் உள்நாட்டில் உள்ள மூல பொருட்களை வைத்தே ராணுவ வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகளை தயாரித்து செயல் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. எடை மிக குறைவாகவும், நீண்ட காலம் உழைக்க கூடிய வகையில் இந்த பாதுகாப்பு உடை தயாரிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த செலவில் தரமான வகையில் இவ்வுடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீன பொருட்களை புறக்கணிக்கும் நேரம் நெருங்கி வருதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சில நாடுகளே தங்களுக்கு தேவையான கவச உடைகளை தயாரித்து வருகிறது.. தற்பொழுது அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.


Share it if you like it