சீன ராணுவத்தின் மிக கோழைத்தனமான தாக்குதலால் 20 ராணுவ வீரர்களின் வீரமரணம் இந்தியர்கள் மனதில் கடும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, இன்று வரை இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் தெரிவிக்கவில்லை என்பதில் இருந்து அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 10 சிறுவர்கள் அடங்கிய குழு வீட்டை விட்டு கிளம்பி சாலைகளில் வேகமாக ஓடி கொண்டு இருந்தனர். அவர்களை வழி மறித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்பொழுது அச்சிறுவர்கள் இவ்வாறு கூறியுள்ளனார்.
இந்திய வீரர்களின் மரணத்திற்கு காரணமான சீனாவை பழிவாங்க எல்லையை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் என்று அச்சிறுவர்கள் கூறியுள்ளனர்.
இச்செய்தி காவல்துறையினரை மிகுந்த ஆச்சர்யம் அடைய செய்துள்ளது. அதன் பின் காவல்துறை அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு திரும்பி போக செய்துள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் உணர்விலும் தேச பக்தி இரண்டற கலந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சில அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சில்லறை போராளிகளை, தவிர என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

Jai Hind.