சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறை !

சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறை !

Share it if you like it

  • நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. கொரோனா நோய்த்தொற்றிலிருந்து நோயாளிகளை காப்பாற்ற வருகிற சுகாதார பணியாளர்களையும், காவல் துறையினரையும் கொடூரமாக தாக்குவது பெரும் வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். எனவே இதனை தடுப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரு அரசாணையை மோடி அரசு தற்போது கொண்டு வந்துள்ளது.
  • சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், கட்டுக்கடங்காத கும்பலைத் தடுக்க மத்திய அரசு சரியான நேரத்தில் கட்டளை பிறப்பித்துள்ளது. இதன்படி சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க கூடும் என்று அறிவித்துள்ளது. மேலும்  ரூ.50,000 முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

source : opindia

 


Share it if you like it