Share it if you like it
சுதந்திர தீ எங்கும் பரவ சுள்ளிகளாய் அமைந்த ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கத்தை முதலில் முழங்கிய சிங்கம் செண்பகராமன். நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார். (செண்பகராமன்)
ஆங்கிலேய தளபதியான மருதநாயகம் என்ற முகமது யூசுப் கானின் படையினர் மறைந்திருந்து தாக்கியதால் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், துண்டை எடுத்து கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு தென்தமிழக பகுதியை காத்தவர். (பெரிய காலாடி)
- தனது ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி (அஞ்சலை அம்மாள்)
- ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்து போரிட்ட மன்னர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801- ம் ஆண்டு செப்டம்பரில் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார். (கோபால் நாயக்கர்)
- 1930-ல் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட வன சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷாருக்கு எதிரான அன்னிய நாடுகளின் உதவியுடன் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை ஏற்படுத்த, ஒரு ரகசிய தொடர்பு வட்டத்தை ஏற்படுத்தியவர். (டாக்டர் ஹெட்கேவார்)
- இராமனின் உருப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்த பெரியாருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தவர். இது ஒரு சமூக விரோதச் செயல். சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கை விடுத்தவர் ( கக்கன்)
- இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில் 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர் நீலகண்ட பிரம்மச்சாரி. தம் வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். (நீலகண்ட பிரம்மச்சாரி)
- எட்டு மாத கர்ப்பத்துடன் 48 மைல் தூரம் நடந்தே சென்று தனது தேச உணர்வை வெளிப்படுத்தியவர். பெல்காமில் காந்தி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக பத்மாசனியை காந்தியே அழைத்தவர். (பத்மாசினி அம்மையார்)
- மக்களுக்கு சுதந்திர வேட்கையை எழுப்பும் விதமாக பேசியதால் ஆங்கிலேயரால் கடுமையாக தாக்கப்பட்டு கயிறால் கட்டி பல கிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையில் அடைத்தனர். (வைத்திய நாதய்யர்)
- இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் இரும்பு கையாக இருந்து இந்தியாவுடன் இணையாமல் தனித்தே இருக்க விரும்பிய ஜீனாகத் மற்றும் ஜதராபாத் மாநிலங்களுக்கெதிராக இராணுவ நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். (வி.பி. மேனன்)
- ‘வந்தே’ ‘மாதரம்’ என்று தனது குழந்தைகளுக்கு பெயர் வைத்தவர். ஆஷ்துரை கொலை வழக்கில் வ.உ.சி அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் அடைக்கப்பட்டவர், வ.உ.சியை தெய்வமாக வணங்கியவர். (தியாகி ரங்கன்)
- விடுதலை போரில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ‘அனுபவித்துக் கொண்டிருந்த அடி, உதை, சிறை, சித்ரவதை, ஆகியவற்றையும், அதற்கு மேலாக அவமானத்தையும் அனுபவித்தவர் (அம்புஜம்மாள்)
Share it if you like it