ஹிந்துக்களுக்கு அநீதி..! அதிமுக அரசிற்கு எதிராக இந்து முன்னணி கண்டன அறிக்கை..!

ஹிந்துக்களுக்கு அநீதி..! அதிமுக அரசிற்கு எதிராக இந்து முன்னணி கண்டன அறிக்கை..!

Share it if you like it

இந்து முன்னணி மாநில தலைவர் தமிழக அரசிற்கு பின்வருமாறு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது.

கடந்த 5ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.

மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது.

ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு.

தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளர், பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு .

பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில்  , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it