ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாகவும், நிம்மதியாகவும், இந்தியர்கள் என்கின்ற ஒற்றை குடையின் கீழ் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, என்று கூறியபடி, உழைக்காமலே தங்களை வளப்படுத்தி கொள்ளும் ஒரு இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அனைவரின் கையும் நீளும் திசை பெரியார் திடல் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே மிக கடுமையாகவும், சமூகத்தில் குழப்பத்தை இன்று வரை ஏற்படுத்தி வரும் இயக்கமாகவும் திராவிடர் கழகம் இயங்கி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..
இந்நிலையில் தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள் தி.க-வை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
என்றைக்கு திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவானதோ அன்றைக்கே தமிழ் நாகரிகம் என்ற ஒன்று கெட்டு குட்டிச்சுவராக போய்விட்டது.. – தயாரிப்பாளர் கே.ராஜன் pic.twitter.com/JUSXqbmmoj
— sundarrajacholan சுந்தர்ராஜசோழன் (@sundarrajachola) January 20, 2021