அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன் வகைகளில் தோசையும் ஒன்றாகும். இப்போது வித்தியசமான முறையில் சிவப்பு அவல் தோசையை எவ்வாறு வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
தோசை மாவு – 2 கப்
சிவப்பு அவல் – 2 கப்
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிவப்பு அவலை 15 நிமிடம் ஊற வைத்து, தோசை மாவுடன் கலந்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கிய கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
கடைசியாக தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான சிவப்பு அவல் தோசை தயார்! இதை தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.