டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பல்பு வாங்கிய அப்துல் ரஹ்மான்!

டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பல்பு வாங்கிய அப்துல் ரஹ்மான்!

Share it if you like it

அண்மையில் டாக்டர்  கிருஷ்ணசாமி இவ்வாறு கூறியிருந்தார்.

ரம்ஜான் நோம்பு கஞ்சிக்கு என்று 5,480 மெட்ரிக் டன் அரிசியை, வேண்டாம் வேண்டாம் என்று தீர்மானம் போடக்கூடிய ஜமாத்துகளுக்கு வழங்கி ஏன்? வீணடிக்க வேண்டும்?

ஓட்டுகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு அனைத்து ஜமாத்துகளுக்கும் 5480 மெட்ரிக் டன் அரிசி நோம்பு கஞ்சிக்காக வழங்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த அரிசியை உற்பத்தி செய்த ஏழை, எளிய விவசாயிகள், பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது. அவர்களுக்கு இந்த 5,480 மெட்ரிக் டன் அரிசியை பகிர்ந்து அளித்திருக்கலாமே? என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காக உரிமைகளை பெற்று தருவதாக அம்மக்களை நம்ப வைத்தீர்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு என உருவான ஓர் அரசியல் கட்சியின் தலைவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மனதார ஆர்வம் கொண்டு நீங்கள் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் முழுமையாக ஆதரவளித்தது இஸ்லாமிய சமூக மக்கள் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தனிநபர், தாக்குதலிலும் தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லே, அவ்வறிக்கையில் அதிகம் இடம் பெற்றிருப்பது. அக்கட்சியினரின் மத்தியில், கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அக்கட்சியின் சார்பில் ரஹ்மானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it