Share it if you like it
இந்தியாவை அடுத்து அமெரிக்காவும், சீனாவின் டிக்டாக் செயலி, தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கையை டிக்டாக் மேற்கொண்டது. இதுகுறித்தான வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனால் டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு அமெரிக்க நீதிபதி நிகோலஸ் இடைக்கால தடை விதித்தார். நவம்பரில் தேர்தல் முடிந்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்பட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Share it if you like it