டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Share it if you like it

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேறியுள்ளது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஜனநாயகட்சி சார்பாக கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 435 பேர் கொண்ட பிரிநிதிகள் சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 229 பேரும் எதிராக 198 பெரும் வாக்களித்தனர். இதனால் கண்டனத் தீர்மானம் நிறைவேறியது. இருப்பினும் தீர்மானமானது செனட் சபையில் நிறைவேறினால் தான் டிரம்ப் பதவி இழப்பார்.

ஆனால் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி பெரும்பான்மை பெற்றிப்பதால் தீர்மானம் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  100 பேர் கொண்ட செனட் சபையில் குடியரசு கட்சியின் பலம் 53 ஆகவும் ஜனநாயக்கட்சியின் பலம் 47 ஆகவும் உள்ளது. தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் நிறைவேற 66 வாக்குகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it