டெல்டா பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கு: நமக்கு எதுக்கு டெல்லி விவகாரம்!

டெல்டா பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கு: நமக்கு எதுக்கு டெல்லி விவகாரம்!

Share it if you like it

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என பாரதப் பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமாக இருந்தவர் மணீஷ் சிசோடியா. இவர், மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தன. அந்தவகையில், மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக இவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடுக்கப்பட்டது.

இதையடுத்து, 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் மணீஷ் சிசோடியாவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் பாரதப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் ;

இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் இருப்பவரை பிரதமர் மோடி எப்படி? விடுவிக்க முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில், டெல்டா பிரச்சனையே தலைக்கு மேல் இருக்க, நமக்கு எதுக்கு டெல்லி பிரச்சனை என நெட்டிசன்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Image

Share it if you like it