கடந்த சில மாதங்களாக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் கைகோர்த்து டெல்லியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் அத்மி போன்ற கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களிடையே தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கி அவர்களை போராட தூண்டி வந்தனர்.
இந்நிலையில் இவர்களின் அர்த்தமற்ற போராட்டத்தினால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அம்மக்களுக்கு போராட்டக்காரர்கள் மீது நம்பகத்தன்மை குறைந்து கோபமும் வெறுப்பும் உண்டானது. இதனை அறிந்த ஷாகின்பாக் போராட்டக்குழு புதிய யுக்தியை கையாண்டனர்.
அவ்வப்போது போராட்டக்களத்திற்கு கத்தியுடனும், துப்பாக்கியுடனும் வந்து ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் போன்ற கோஷமிடுவது போல் நாடகம் நடத்தினர். இதன்மூலம் பாஜக இஸ்லாமியர்களை வெறுப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றது ஷாகின்பாக் போராட்ட குழு. ஆனால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் இந்த திட்டம் எடுபடவில்லை.
துவங்கிய போராட்டத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்த போராட்ட குழு இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் டிரம்பின் வருகையையொட்டி இருக்கும்பொழுது ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்தி அந்த பழியை ஹிந்துக்கள் மீது போட்டு இதிலிருந்து போராட்டத்தை நாங்கள் முடித்து கொள்கிறோம் என்ற நாடகத்தை அரங்கேற்றலாம், என்று திட்டமிட்டதை டெல்லியில் போராட்டக்களத்தில் உள்ள நமது மீடியான் நிருபர்கள் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.