டெல்லி கலவரத்திற்கு பணத்தை வாரி வழங்கிய இந்தோனேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அக்ஸி செபாட் டாங்காப் (ACT) இது தீவிரமயமாக்கப்பட்ட முஸ்லீம் அமைப்பாகும்.
மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்த சட்டம், தொடர்பாக எதிர்கட்சிகள் பரப்பிய புரளியை நம்பி, அப்பாவி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தை தங்களது, சுயநலத்திற்காக பிரிவினைவாதிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், மற்றும் வெளிநாட்டு சக்திகள். இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், மறைமுகமாக வன்முறைக்கு வித்திட்டனர். இதனை முறியடிக்கும் விதமாக தேச நலன் கொண்ட, ஊடகங்கள் அவ்வபொழுது நேர்மையான, செய்திகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றியும், டெல்லி கலவரம் பற்றியும், நாடாளுமன்றத்தில் நீண்ட விளக்க உரையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெல்லி கலவரத்திற்கு எரிபொருளாக வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக வன்முறையாளர்களுக்கு கைமாறியுள்ளது. மேலும் இந்தோனேசிய தன்னார்வ தொண்டு நிறுவனம் அக்ஸி செபாட் டாங்காப் (ACT) என்பது மிகவும் தீவிரமயமாக்கப்பட்ட முஸ்லீம் அமைப்பாகும். இது பல முஸ்லீம் நாடுகளுக்கு, உதவி என்ற பெயரில் பணத்தை வழங்குகிறது. இந்த அமைப்பு இந்தியாவுக்கு ரூ .25 லட்சத்தை அனுப்பியுள்ளது. இந்த பணம் கலவரத்தில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு, தொடர்ந்து பொய் செய்தியினை பரப்பி, அதன் மூலம் அந்த தன்னார்வ தொண்டு, நிறுவனம் நிதி திரட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது.
இந்த பணம் துபாயிலிருந்து ஹவாலா சேனல்கள், வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. அந்த பணத்தை கொண்டு வடகிழக்கு டெல்லி, பகுதியில் கலவரத்தை மேலும் தூண்டுவதற்காக, 25,00,000 டாலர்களை விநியோகிக்க டெல்லியில் உள்ள, உள்ளூர் முஸ்லீம் அமைப்புகளுடன், தன்னார்வ தொண்டு தொடர்பில் இருந்தை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு அந்த அமைப்பான ACT, இக்குற்றச்சாட்டுகள் பொய் என்று மறுத்துள்ளது. ஆனால் இந்த அமைப்பானது டெல்லி கலவரம், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது, என்ற பிரச்சாரத்தை அது தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவர்களின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் NHO இன் வலைத்தளம் “இந்தியாவின் முஸ்லீம் சகோதரர்களுக்கும், துன்புறுத்தப்படுபவர்களுக்கும்” உதவுமாறு கேட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.