ட்விட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையானது பின்தொடர்ந்த ஒரே இந்திய தலைவர் மோடி மட்டுமே !

ட்விட்டரில் அமெரிக்க வெள்ளை மாளிகையானது பின்தொடர்ந்த ஒரே இந்திய தலைவர் மோடி மட்டுமே !

Share it if you like it

  • கொரோனா நோயை தடுப்பதற்காக இந்தியாவில் அதிகம் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் அலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியும் நம் நாட்டுக்கு தேவையான அளவு வைத்துக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தார். டிரம்ப் இதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
  • இந்நிலையில் பிரதமர் மோடியின் மென்மையான இராஜதந்திர வெற்றியில், வெள்ளை மாளிகையின் ட்விட்டர் கணக்கு பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கைப் நேற்றிலிருந்து பின்தொடர்கிறது. வெள்ளை மாளிகை சமூக வலைத்தளங்ளில் பின் தொடர்ந்து வந்த முதல் சர்வதேச தலைவராக மோடி மட்டுமே திகழ்கிறார்.

  • வெள்ளை மாளிகை ட்விட்டரில் 19 கணக்குகளை மட்டுமே பின்பற்றுகிறது, அதில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோவிந்த் தவிர வேறு எந்த அமெரிக்கரல்லாத தலைவரும் பின்பற்றப்படுவதில்லை. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு எல்லா நேரத்திலும் உயர்ந்தது என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

Share it if you like it