பெங்களூருவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தால் அந்த பகுதியில் வாழும் ஏழை, நடுத்தரவர்க்க தமிழர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்த தகவலின் அடிப்படையில்
கலவரம் நடந்த தேவர் ஜீவனஹள்ளி, காடு கொண்டனஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகள் ஏழை எளிய நடுத்தர வர்க்க தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதியாகும். இந்த பகுதி மக்களின் வீட்டுக்குள் புகுந்து டிவி, பீரோ, குளிர்சாதன பெட்டி, மர சாமான்களை சேதப்படுத்தி, வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்து. இதை தடுக்க முயற்சித்த உரிமையாளர்களை கத்தியை காட்டி, வெட்டி போட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இரும்பு கம்பி, உருட்டு கட்டை ஆகியவற்றால் தாக்கியதால் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்துள்ளனர். இதில் 20 பேர் பெண்களும், வயதானவர்களும் ஆவார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அடிப்படைவாத முஸ்லிம் இளைஞர்கள் போதையில் இருந்ததாகவும். ஏற்கெனவே நோய்த்தொற்று ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டதால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் உணர்வை தூண்டி மொழி அரசியல் செய்து வரும் எந்த தமிழக கட்சிகளும், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏன் இதுவரை பெங்களூருவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஆதரவு குரல் எழுப்பவில்லை என்றும், சமூகவலைத்தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.