ராகுல் பிடியில் பேஸ் புக், அதிர்ச்சிப் பின்னணியை வெளியிட்ட ரவிசங்கர் பிரசாத்..!

ராகுல் பிடியில் பேஸ் புக், அதிர்ச்சிப் பின்னணியை வெளியிட்ட ரவிசங்கர் பிரசாத்..!

Share it if you like it

காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் மோடி அரசாங்கத்தை பேஸ்புக் & வாட்ஸ்அப் சர்ச்சைக்குரிய ட்வீட் போட்டு அது சமூக வலை தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
blank
ராகுல் தனது ட்வீட்டில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையை மேற்கோள் காட்டி ,பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களை எவ்வித கட்டுபாடும் இல்லாமல்  வெளியிடுகிறது. மோடி அரசு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் .
ஆனால் பேஸ்புக்பிரச்னைகளில் கடந்த காலங்களில் காங்கிரஸ் மீதான குற்றாச்சாட்டுகள் பெரிதாவானவை. முந்தைய சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு(யுபிஏ ) எவ்வாறு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இதே பேஸ்புக் செயலியின் தகவல்களை திருடி பொது தேர்தல்களுக்கு பயன்படுத்தியது என்பது குறித்து மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் பதிலடி அளித்திருந்தார்.

உண்மையில் காங்கிரஸ்- பேஸ்புக் இடையேயான தொடர்பே சர்சைக்குரியது. இந்தியாவில் இந்த பேஸ்புக் சர்ச்சை பற்றிய உண்மையில், காங்கிரஸ் மற்றும் ராகுல் பதிலளிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. 2019 பொதுத் தேர்தலுக்கு சற்று முன்னர், 2018 ஆம் ஆண்டு வார்டன் பல்கலைக்கழகத்தில்  உயர்கல்வி படித்த கேரளவை சேர்ந்த அஜித் மோகன் பேஸ்புக்கின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பாட்டர் .இவர் 2009-2014 வரை நடந்த சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசில் (யுபிஏ ) மத்திய வீட்டு வசதி அமைச்சகம் மற்றும் திட்ட ஆணையத்தில் பணியாற்றியவர் .
ஆக சோனியா-ராகுலுக்கு நெருக்கமான அஜித் மோகன் தான் இன்றும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர்.
இங்கே  மற்றொரு சுவாரசியமான  தொடர்பும்  உள்ளது . ராகுலின் நெருங்கிய உதவியாளரும் அரசியல் ஆலோசகருமான கனிஷ்கா சிங்  அஜித் மோகனுடன்  வார்டன்  பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர். இன்று  ராகுல்- சோனியா முறையற்ற வழியில்  சொத்துக்களை அபகரித்து கொண்டதாக சொல்லப்பட்டு, நீதிமன்ற வழக்கில் உள்ள நேஷனல் ஹெராலட் பத்திரிக்கையின் பொறுப்பாளர் கனிஷ்கா சிங் .

இந்த அஜித் மோகன் பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்படும் வரை   தேசிய ஹெரால்ட் வழக்கு  தொடர்பாக அனைத்து நீதிமன்றங்களிலும், காங்கிரஸ் சார்பாக  வழக்கை கண்காணித்து ஒருங்கிணைக்கும் முக்கிய மனிதராக இருந்தார் .
இன்றைய பேஸ்புக்  சர்ச்சை நிச்சயமாக, வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் ,மோடி அரசின் மீது   ஏதாவது வகையில் குற்றம் சொல்லவேண்டும் என்பதற்காக ராகுல் -கனிஷ்கா சிங் -அஜீத் மோகன்- கூட்டணி யின் உத்தரவின் பேரிலேயே  எழுதப்பட்டிருக்கலாம்


Share it if you like it