Share it if you like it
- உத்தரபிரதேச மாநிலம் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியான முஸாபா நகரத்தில் உள்ள மொரானா பகுதியில் காவல் துறை அதிகாரிகள் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்களில் சுற்றி திரிந்துள்ளனர். இதனை கண்ட காவல் துறை அதிகாரிகள் அவர்களை திரும்பி போக அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் காவல் துறை அதிகாரிகளை இரும்பு கம்பிகள் மற்றும் லத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
- அந்த மர்ம நபர்கள் தாக்கியதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மூன்று கான்ஸ்டபிள்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் சப் இன்ஸ்பெக்டர் லெக்ராஜ் சிங் மீரட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் வட்ட அலுவலர் ராம் மோகன் சிங் தெரிவித்தார்.
Share it if you like it