கொரோன ஒழிப்பில் இன்று உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரனமாக திகழ்கிறது. உலக சுகாதர அமைப்பே மூன்று முறைக்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பாரதப் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியினாலும் தமிழக முதல்வர், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை
பணியாளர்களின் இரவு, பகலாக, அரும்பாடுபட்டு உழைத்ததால், 35 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று இல்லை. என்பது தமிழக மக்களுக்கு சற்று, ஆறுதலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதையே அண்மையில் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் இன்று புதிய கொரோனா தொற்று இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும். இதை சாத்தியமாக்கிய தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கும், மக்களுக்கும் பாராட்டுகள். இதே நிலை நீடிக்க வேண்டும். கொரோனா விரட்டியடிக்கப்பட வேண்டும்!@CMOTamilNadu #TNGovt
— Dr S RAMADOSS (@drramadoss) April 27, 2020