தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும்  ஸ்டாலின்  !

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஸ்டாலின் !

Share it if you like it

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக காவிரி டெல்டா பகுதிகளை சிறந்த வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்தார். இதற்கு பல தலைவர்களும் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து இத்திட்டத்தை வரவேற்றனர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பல தலைவர்கள் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக த.ம.காவை சேர்ந்த ஜி.கே வாசன் அவர்கள் ஸ்டாலினை விளாசியுள்ளார். ஜி.கே வாசன்,  முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்த திட்டமானது விவசாயிகளுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கும் நன்மை தரும் வகையில் இருக்கும்போது ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஒட்டுமொத்த தமிழர்களையே ஸ்டாலின் பகைத்து கொள்கிறார். இந்த திட்டத்திற்கு ஆதரவு தரவில்லையென்றாலும்கூட பரவாயில்லை. ஆனால் ஒரு நல்ல திட்டத்தினை எதற்காக எதிர்க்க வேண்டும். ஸ்டாலினின் இச்செயலானது தமிழ்நாட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தனக்கு பதவி வெறிதான் முக்கியம் என்பதுபோல் தெரிகிறது. ஆக்கப்பூர்வமான முறையில் சிந்தித்து நேர்மையான சிறந்த கட்சியாக இருக்க செயல்படுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

பொதுவாக திரு.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசானது எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் கண்மூடித்தனமாக அத்திட்டத்தை எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது வேளாண் மண்டலம் என்பதற்கு பதிலாக பொருளாதார மண்டலம் என உளறியுள்ளார். மேலும் சமீபத்தில் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருதை மத்திய அரசு வழங்கியது. இதனை விமர்சிக்கும் வகையில் திருமண நிகழ்வில் ஸ்டாலின் அவர்கள் அதிமுக அரசுக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று வன்முறை தூண்டும் விதமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it