சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், என்று அகல வாய் திறந்து பேசும் திராவிட இயக்கங்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், தமிழகத்தில் மட்டும் அதிகம் உள்ளனர். ஆனால் இறந்தவர் எந்த ஜாதி, மதம், இனம், மொழி, கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சியா என்று பார்த்த பிறகே இவர்கள் ஒப்பாரி வைப்பார்கள் என்பது தமிழக மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
அமெரிக்க காவல்துறையால் ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர் அண்மையில் கொல்லப்பட்டார். இதற்கு திருமாவளவன், அலூர் ஷா நவாஸ், சுப.வீரபாண்டியன் சில பிரபலங்கள், முதலானவர்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பல அப்பாவி ஹிந்துக்கள் அண்மையில் ராமலிங்கம் என்று பலர் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அதற்கு கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. அதே போன்று இரண்டு ஹிந்து சாதுக்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கிறிஸ்துவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரில் கொல்லப்பட்ட பொழுது மெளனம்.
ஆனால் அமெரிக்காவில் ஒருவர் இறந்தால் கண்டிக்கும் திராவிட இயக்கங்கள், பிரபலங்கள், ஹிந்துகள் இறந்த பொழுது எங்கே? போனார்கள். ஹிந்துகளுக்கு வந்தால் தக்காளி சட்னி மற்றவர்களுக்கு வந்தால் ரத்தமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.