ஆண்டுத்தோறும் நடைப்பெறும் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நேற்று மாலை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைப்பெற்றது. இதனை மாதா அமிர்தானந்தமயி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பெண் குலத்தை போற்றும் இந்நிகழ்ச்சியினை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமை அடைகிறேன்.
நம் நாட்டின் மீது பல அந்நிய படையெடுப்புகளின் மூலம் மனம், எண்ணம், பண்பாட்டு ரீதியில் நாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் குடும்ப உறவுகள், குடும்பச் சூழ்நிலை மாறி இருப்பது வருத்திற்குரியது. முன்பெல்லாம் நம் பெற்றோரை தெய்வமாக மதித்து தொழுதோம் அதுவெல்லாம் அந்நிய நாட்டு நாகரீகம் என்ற பெயரில் நம் பாரம்பரித்தை இழந்து நம் நிலைமையே இன்று தலைகீழாக மாறிவிட்டது.
இன்று பெண்களுக்கு உரிய முக்கியத்துவம், மரியாதை இல்லாமல் அவர்களை நடத்துவது. தாய்மையின் பெருமையை மறந்ததே இந்த நிலைக்கு காரணம். பெண் என்றால் சபலம் உடையவர். அபலை, வீரம் இல்லாதவர், புகலிடம் இல்லாதவர்கள் என்கின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு இயற்கையாகவே திறன் உண்டு என்பதை உணர வேண்டும்.
பெண்களுக்கு வாய்ப்பும், சுதந்திரமும் அளித்தால் எல்லா தடைகளையும் தாண்டி சாதனை படைப்பார்கள். பாரத நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை மீட்டெடுப்பதில் பெண்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அதற்கான வாய்ப்பு வசதிகளை ஆண்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தாய்மை, பொறுமை, தற்காப்பு, சகிப்புத்தன்மை ஆகியவை பெண்களிடம் இயல்பாகவே உள்ள உண்ணத குணங்கள். அவர்கள் தானாகவே ஒளிவிடும் சூரியன் போன்றவர்கள். சிங்கத்தைப் போல கர்ஜிக்கும் பலமும், வீரமும் பெண்களுக்கு உண்டு. பெண்களின் கருணை, தாய்மை விலை மதிப்பற்றது. மாற்றத்தை ஏற்படுத்தும் மாபெரும் வல்லமை அவர்களுக்கு உள்ளது.
அரசியல், சமூக, பொருளாதாரப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு ஆறுதல் அளிக்கிறது. வாழும் சூழலும், ஆன்மிகச் சூழலும் நற்பண்புகளை வளர்க்கும். நல்ல சூழலை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்து நம் கலாச்சாரம் மேலும் வளர பெற்றோர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மீக கண்காட்சி பிப்ரவரி 3-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.