கொரோனா தொற்றில் உலகமே ரத்த கண்ணீர் வடித்து வரும் நிலையில் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து படையெடுத்த வெட்டுகிளிகளின் அட்டசாகம் விவசாயிகளின் மத்தியில் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் லட்சக்கணக்கான விவசாயிகள் இன்று தங்கள் பயிர்களை இழந்து ஆழ்ந்த கவலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பாலிவுட் நடிகை ஜைரா வாசிம் தனது டுவிட்டர் பக்கத்தில் குரானை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறியுள்ளார்.
வெள்ளம், வெட்டுக்கிளிகள், பேன், தவளைகள் மற்றும் இரத்தத்தை நாங்கள் அவர்களுக்கு அனுப்பினோம் ஆனால் அவர்கள் ஆணவத்தில் மூழ்கியிருந்தார்கள் – பாவத்திற்குள்ளான மக்கள்.” நாடு முழுவதும் வெட்டுக்கிளி தாக்குதல் ‘திமிர்பிடித்த மக்கள்’ மீது ‘அல்லாஹ்வின் கோபம்’ என்று கூறியுள்ளார்.
எந்தவித புரிதலும் இல்லாமல் அண்மையில் ஜம்மூ-காஷ்மீர் பற்றி தவறான தகவல்களை கூறி மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“So We sent upon them the flood and locusts and lice and frogs and blood: Signs openly self explained: but they were steeped in arrogance- a people given to sin”
-Qur’an 7:133
— Zaira Wasim (@ZairaWasimmm) May 27, 2020