அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில். மீண்டும் மொழி பிரச்சனையை தூண்டி, மக்களிடையே பெரும் குழப்பத்தை, ஏற்படுத்த முயற்சி செய்கிறது திமுக. என்று பரவலாக மக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். நன்கு திட்டமிட்டு புதிய (டி.சர்ட்) வடிவில் தற்பொழுது சில்லறை போராளிகள், கைகூலி ஊடகங்கள், தமிழகத்தில் பரபரப்பான செய்தியாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.
நீங்கள் இந்தி படிக்காததால், இந்தி அழிந்துவிடப் போவதில்லை! உங்கள் சந்ததி தமிழ் படிக்கவில்லை என்றால் தமிழ் அழிந்துவிடும்! உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால். தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள்!
உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, போன்று வெட்டி விளம்பரம் செய்யும் நபர்களுக்கு சம்மட்டி அடியை இயக்குனர் வழங்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இந்தி படிக்காததால்
இந்தி அழிந்துவிடப் போவதில்லை!
உங்கள் சந்ததி தமிழ் படிக்கவில்லை என்றால் தமிழ் அழிந்துவிடும்!
உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால்
தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள்! pic.twitter.com/RycFlz6mv5— PERARASU ARASU (@ARASUPERARASU) September 7, 2020