ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தங்களால் இயன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அக்சய் குமார் 30 கோடிக்கு மேல் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதே போன்று சல்மான்கான் 1 லட்சம் கிருமி நாசினி திரவங்களை மும்பை காவல்துறைக்கு வழங்கியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவால், மும்பையில் சிக்கி தவித்த 200 தமிழர்களின், நிலையை உணர்ந்து தனது சொந்த செலவில், பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களை பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பியுள்ளார் நடிகர் சோனு சூட்.
நாம் இந்தியர்கள் என்ற பரந்த மனப்பான்மை இருந்தால் மட்டுமே இது எல்லாம் சாத்தியம். பிரிவினையை தொடர்ந்து வலியுறுத்தும் சில போலி அரசியல்வாதிகளுக்கு இது எல்லாம் புரியாது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Our real life hero @SonuSood is just unstoppable. He sends more migrants home by buses. #SonuSood #MigrantWorkers pic.twitter.com/LmxrdwQ1IG
— Rahul Trehan (@imrahultrehan) June 6, 2020