தெய்வமாக வழிபடும் கோவில் சிலைக்கு  கிழிந்துபோன ரேஷன் கடை உடையை அணிவித்த அறநிலையத்துறை !

தெய்வமாக வழிபடும் கோவில் சிலைக்கு கிழிந்துபோன ரேஷன் கடை உடையை அணிவித்த அறநிலையத்துறை !

Share it if you like it

தூத்துக்குடியில் ஸ்ரீ சங்கரராமேஸ்வர திருக்கோவிலில் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கோவிலில் பக்தர்கள் தெய்வமாக வழிபடும் காந்தாரி அம்மன் சிலைக்கு கோவில் நிர்வாகத்தினர் பழைய கிழிந்துபோன ரேஷன் கடை புடவையை அணிவித்துள்ளனர். இதனால் தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டுவரும் பக்தர்கள் பெரிதும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இப்படியொரு தரக்குறைவான காரியத்தை செய்த அறநிலையத்துறையை கண்டிக்க வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற 29.03.2020 ஞாயிற்று கிழமையன்று திருவாசகம் முற்றோதல் திருவிழா நிகழ்ச்சி நடைப்பெறுவதாக அறநிலையத்துறை செயல் அலுவலர் க.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தக்கார் ப.ரோஷினி ஆகியோர் தங்களை சுயவிளம்பரம் செய்து போஸ்ட்டர் ஒட்டியுள்ள நிகழ்வானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பக்தர் ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். மேலும் அப்புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it

One thought on “தெய்வமாக வழிபடும் கோவில் சிலைக்கு கிழிந்துபோன ரேஷன் கடை உடையை அணிவித்த அறநிலையத்துறை !

  1. இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி

Comments are closed.