தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆன #RSS_For_All !

Share it if you like it

தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து இடம் பெற்றிருந்தது. அதில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்க அமைப்பானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற ஒரு பொய்யான கருத்து இடம் பெற்றிருந்தது.  இதை பார்த்து அதிச்சியடைந்த RSS அமைப்பினர் அந்த பாடபுத்தகங்களிலிருந்து அந்த பதிவை நீக்கவேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனையடுத்து உயர் நீதிமன்றம் மாணவர்களிடையே விநியோகம் செய்யப்பட்ட புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறான தகவல்களை அச்சடிக்காமல் பார்த்துக்கொள்ளவும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை #RSS_For_All என்ற ஹாஷ்டாக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் RSS இயக்கத்தினரால் அதிக அளவில் பகிரப்பட்டு தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆனது.


Share it if you like it