இந்தியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடே தேச மக்களின் மனநிலை என்னும் தலைப்பில் ஒரு கருத்து கணிப்பை மேற்கொண்டது.
மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு வருடம் கழித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்திறனில் இந்திய வாக்காளர்கள் தொடர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்று இந்தியா டுடே-கார்வி இன்சைட்ஸ் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் பின்வருமாறு குறிப்பிடுள்ளது.
30% மக்கள் மிகவும் அற்புதம் என்றும், 48% சதவீத மக்கள் சிறந்த ஆட்சி என்றும். ஆக மொத்தம் 78% மக்கள் பாரதப் பிரதமர் மோடியின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து உள்ளனர். 17% மக்கள் சுமார் என்றும். 5% மக்கள் திருப்தி இல்லை என்றும் தங்களின் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
கொரோனா நெருக்கடி மற்றும் லடாக்கில் சீனாவின் வன்முறை போக்கு ஆகியவற்றிற்கு இடையில் இந்த கருத்து கணிப்பு பாரதப் பிரதமர் மோடியின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.