தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை

தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை

Share it if you like it

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 509 புள்ளிகள் அதிகரித்து 40,868 புள்ளிகளுடனும் தேசியப்பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 12,068 புள்ளிகளுடனும் விற்பனையாகி வருகின்றன. பாரதி ஏர்டெல், டாடா, வேதாந்தா, இண்டஸ்லேண்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை 558 புள்ளிகள் அதிகரித்தன.

யெஸ் வங்கி, ஐ.டி.சி, எச்.சி.எல் மற்றும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி ஆகியவற்றின் பங்குகள் 316 புள்ளிகள் குறைந்தும் விற்பனையாகின. இந்திய பங்குச்சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால் முதலீடு அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவில் பொருளாதார பெருமந்தம் நிலவிவருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it