ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 370 பிரிவை நீக்கி அம்மாநிலத்தை இந்தியாவுடன் இனணத்துக்கொண்டது மத்திய அரசு இதனை அடுத்து பிரிவினைவாதிகள் நேரடியாகவும் மறைமுமாகவும் ஆளும் அரசிற்கு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5, 2019, அன்று
மாநிலங்களவையில் வைகோ மிக ஆவேசமாகவும் காஷ்மீர் மாநிலத்தின் கருப்பு தினம் என்று பேசி தனது கடும் கண்டனத்தையும், மத்திய அரசையும் விமர்சித்திருந்தார். இன்று மாநிலங்களவையில் மோடி உறையாற்றும் பொழுது “தீவிரவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கே அது கருப்பு நாள் என்று வைகோவை மறைமுகமாக வெறுப்பேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மோடி பேசும் பொழுது ராகுல் மற்றும் காங்கிரஸார் கூச்சல் எழுப்பிக்கொண்டே கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த மோடி,இங்கு “நான் 40 நிமிடங்களாக பேசி வருகிறேன், இந்த மின்சாரம் அங்கு சேரவே இவ்வளவு நேரம் ஆயிற்று. இது போன்று நிறைய ‘டியூப் லைட்டுகள்’ உள்ளன ” என கூறினார், இதை கேட்ட காங்கிரஸ் உறுப்பினர்களும் கை தட்டி ராகுலை பார்த்து சிரித்தனர்