நாட்டின் ஒரேமொழி ஹிந்திதான் – அமித் ஷா சொன்னாரா ..?

நாட்டின் ஒரேமொழி ஹிந்திதான் – அமித் ஷா சொன்னாரா ..?

Share it if you like it

இன்று ஹிந்தி மொழி தினம் என்பதால் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ;

அவர் கூறியிருக்கும் விஷயங்களில் முக்கிய விஷயம் என்னவென்றால், இன்று ஹிந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நான் நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அதாவது, அவரவர் அவருடைய தாய்மொழியில் பேசுவது போல, அதனுடன் ஹிந்தியையும் கற்று அதில் பேசுவதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரே மொழியாக ஹிந்தி அமைந்துவிடும். அனைத்து திசைகளிலும் பேசப்படும் மொழியாக ஹிந்தி மாறிவிடும். அதன் மூலம் சர்தார் படேல் கண்ட கனவு நிறைவேறும்.

இந்தியா பல மொழி பேசும் நாடுதான். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் உண்டு. ஆனால், நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போது, சர்வதேச அளவில் நமது இந்தியா அறியப்படும். அதுமட்டுமில்லாமல், அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் ஹிந்தி மாறும் என்றும் அமித் ஷா தனது விருப்பத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.எப்படி தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதால் நாம் பிற மொழிகளை அழிக்க பார்க்கிறோம் என்றா அர்த்தம் கொள்ளமுடியாதோ அதுபோல் சாதாரணமாக கூறிய வார்த்தைகளை நம் தமிழகத்தின் தமிழ் மொழி வியாபாரிகளோ அமித் ஷா இந்தியாவில் ஹிந்திக்கு மட்டுமே இடம் உண்டு என கூறிவிட்டார்,மற்ற மொழிகளை உதாசினப்படுத்திவிட்டார் என்றும் வழக்கமான தனது வியாபர கூச்சல் மூலம் மக்களை நாட்டிற்கு எதிராக திருப்பும் வேலையை துவங்கிவிட்டனர். மேலும் ஹிந்தியை பிரதானப்படுத்தி மற்ற மொழியை ஆழிக்கப்பார்ப்பதாக பொய் குற்றச்சாட்டு வைக்கப்படும் அமித் ஷாவுக்கே குஜராத்திதான் தாய் மொழி என்பது குறிப்பிடதக்கது .


Share it if you like it