பாரதப் பிரதமர் மோடி கேட்டு கொண்டதற்கு இணங்க விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், என்று பல நல்ல உள்ளங்கள் நிவாரண நிதியினை தாராளமாக வழங்கினர். ரத்தன் டாடா 1,500 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கும். ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு டாடா குழுமம் வழங்கியது.
அரசியல் நிபுணருக்கு 380 கோடி ரூபாயும் ஒட்டு போடும் மக்களுக்கு சொற்ப தொகையையும் ஒரு தமிழக கட்சி வழங்கியது. சீன ஆதரவாளர்கள் மற்றும் இங்குள்ள சில கட்சிகள் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையே தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இச்சூழ்நிலையில் தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரத்தன் டாடா அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
”அனைவருக்கும் இந்த வருடம் மிகவும் சவால் நிறைந்ததாக ஆண்டாக உள்ளது. இச்சூழ்நிலையில் நல்ல புரிதலும், அதிக அன்பு, மற்றும் அதிக பொறுமையும் தேவைப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், ஒற்றுமையாகவும், இருக்க வேண்டிய நேரம். காயப்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல. அரவணைப்பும், ஊக்கமும், நிறைந்த தளமாக சமூக வலைதளங்கள் மாற வேண்டும் என்று தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.