Share it if you like it
- முப்பது கோடி ஹிந்து கடவுள் அவதாரங்கள் இருந்தாலும் அதில் ஒரு தெய்வம் கூட பிற மத நம்பிக்கை உடையவர்களை கொலை செய் அல்லது மதமாற்றம் செய் என்று சொல்லி கொடுக்கவில்லை.
ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. தெய்வங்கள் இறங்கி மனித உருவில் வாழும் தத்துவம் கற்பித்த ஒரு நெறிமுறை தான் ஹிந்துக்களின் இறை வழிபாடு.
மனித வாழ்க்கையை நிறைவாக மகிழ்ச்சியாக செதுக்கி கொள்ள பிறப்பு ஒரு வாய்ப்பாகவும் இறப்பு ஒரு சக்கரமாகவும் சூழன்று இறையும். நானும் வேறல்ல என்ற உணரும் தருணம் பிறப்பு அற்றுப் போகும். - இராமாயணம் படித்தால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்க நேரும் அத்தனை இன்ப துன்பங்களை கண் முன் நிறுத்திவிடும். அதில் கிடைக்கும் தெளிவு மட்டுமே நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றும் வல்லமை கொண்டது. இது கதையோ ஆதாரமற்ற வரலாறோ இல்லை. கதையாக தலைமுறை தலைமுறையாக நம்மை வந்தடையும் காவியங்கள். இந்தியாவின் வேறாக நிற்கும் கோவில்கள் சொல்லும் நம் வரலாற்று பெருமைகளை.
இயற்கையோடு இயைந்து இறைவனை உணர்ந்து இன்ப துன்பங்களை கடந்து மண்ணில் ஒரு விதையாகி உலகம் போற்றும் கதையாகி இறையடி சேரும் இயற்கையின் ஒரு இழை நாம்! - சக மனிதர்களிடம் இறைவனை பார்க்கும் உயரிய தத்துவம் கொண்ட ஹிந்து மதம் ஒரு கலாச்சாரம். சிலைகளை கல் எனலாம், பல்லாயிரம் ஆண்டுகளாக இறையடியார்கள் கண்கள் வழி வந்த அந்த நம்பிக்கை தான் அச்சிலையை தெய்வமாக மாற்றுகிறது.
- அறிவியல் ஹிந்து மதத்தை புரிந்து கொண்டதற்கு சாட்சி – ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் 2004 ஜூன் 18 அன்று செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணம் செய்தது.
இயற்கையின் அத்தனை படைப்புகளையும் தொட்டனைத்த ஒரே மதம் ஹிந்து மதம். - இத்தனை அர்த்தம் பொதிந்த ஹிந்து மதம் தவறாது இதுவே இதன் தர்மம்.
இறை சார்ந்த மதம் என்பதால் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் இதன் வடிவமே.
பிறப்பில் பிரிவில்லை என்கிறது வேதம். ஹிந்து மதத்தின் உயிரணுவில் இல்லை பிறரை வெறுத்து துன்புறுத்தும் தன்மை. மத மாற்றம் செய்யும் தேவையோ அல்லது பிற மதம் சென்றாலும் அதை தடுக்காது
மனிதர்களை அவர்கள் விதிப்படி வாழவிடும் அந்த பரந்த ஞானமே நம் கலாசாரம்.
வாழ்க வையகம்.
Share it if you like it