நீங்கள் மரணத்தை சந்திக்கும் பொழுது உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது ஓவியர் பாலாவிற்கு – குஷ்பு கடும் கண்டனம்…!

நீங்கள் மரணத்தை சந்திக்கும் பொழுது உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது ஓவியர் பாலாவிற்கு – குஷ்பு கடும் கண்டனம்…!

Share it if you like it

பா.ஜ.க உறுப்பினர் திருமதி குஷ்பு அண்மையில் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்… பா.ஜ.க தொண்டர்கள், ரசிகர்கள், உறவினர்கள் என்று பலர் ஆறுதல் கூறி வரும் நிலையில்… ஓவியர் பாலா தெரிவித்துள்ள கருத்திற்கு நடிகை குஷ்பு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..

நான் போராடிய ஒருவர் இப்படி பேசுவதை கேட்டு வெட்கப்படுகிறேன்.. உங்களுக்கு தைரியம் இருந்தால், போலியான விபத்தை ஏற்படுத்தி முயற்சி செய்யுங்கள்.. நீங்கள் மரணத்தை சந்திக்கும் அந்த நிமிடம் உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது.. உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.. உங்களது பேச்சு கோழைத்தனமாக உள்ளது.. விரைவில் குணமடையுங்கள் பாலா என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it