நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.
நீட் தேர்வு குறித்து சமீப காலமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்., திரை நட்சத்திரங்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக. தங்களின் கடும் எதிர்ப்பை இன்று வரை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய நடிகர்கள், அரசியல்வாதிகள், நீட் தேர்வை ஒரு வில்லன் போன்று மாணவர்கள் மீது திணித்து வருகின்றனர்.
தி இந்து பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் எஸ். முகமது இம்ரானுல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் மெட்ராஸ் ஜகோர்ட் முன்னாள் நீதிபதி என். கிருபாகரன் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்கொலைகளை மிகைப்படுத்தி கூறுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் செலுத்தக்கூடாது என்று நீதிபதி என்.கிருபகரன் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? என்று நீதிபதி கிருபாகரன் 2017-ஆம் ஆண்டு தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Justice N. Kirubakaran of Madras HC says media should stop glorifying suicides and political parties should not pay money to families of the dead. Says this kind of "nonsense" should be stopped forthwith @THChennai
— Mohamed Imranullah S (@imranhindu) September 14, 2020